கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை குறித்த விசாரணையை, தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்ற கோரிய வழக்கில் உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ., சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை குறித்த விசாரணையை, தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்ற கோரிய வழக்கில் உள்துறை செயலாளர்,  என்.ஐ.ஏ., சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகனாகுளத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர், தாக்கல் செய்த பொது நல மனு நீதிபதிகள்  N.கிருபாகரன், S.S. சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில்,  ஏன் இது வரை பதில் மனு தாக்கல் செய்ய வில்லை  என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து, உள்துறை செயலாளர்,  என்.ஐ.ஏ., சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தாக்கல் செய்யாவிட்டால், சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்