இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 07:31 PM
மாற்றம் : பிப்ரவரி 08, 2019, 10:41 PM
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் வாதங்களை முன்வைத்தார். அதிமுகவில் கட்சியின் அடிப்படை விதி 43-ஐ மாற்றி விட்டதாக தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதங்களை முன்வைத்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்திற்கு மதிப்பளிப்பதாக கூறினர். இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதே வேளையில் 1 வாரத்துக்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

129 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5189 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6283 views

பிற செய்திகள்

நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்

மோகன்லாலிடம் ஆதரவு கோரிய நடிகர் சுரேஷ் கோபி

8 views

ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

4 views

கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி

காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

7 views

ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

ஐ.பி.எல்.இறுதிப் போட்டி சென்னைக்கு வாய்ப்பு மறுப்பு : சென்னையிலிருந்து மாற்ற காரணம் என்ன?

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

129 views

தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தென்மணடல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.