கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...

சின்னத்தம்பி யானையை உடனடியாக பிடித்து செல்லவேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வனப்பாதுகாவலர் வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  தஞ்சமடைந்துள்ள சின்னத்தம்பி யானையை பார்த்து கள நிலவரங்களை தெரிந்து கொள்வதற்காக, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேஷ் வந்துள்ளார். அதிகாரிகளிடம் கள நிலவரங்களை கேட்டு, சின்னத்தம்பி யானையின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனிடையே, சின்னத்தம்பி யானையை உடனடியாக பிடித்து செல்லவேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வனப்பாதுகாவலர் வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்