தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
x
நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  விழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் அலகு குத்தியும், கரகம் எடுத்தும்  நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான, பத்ரகாளியம்மனுக்கு எருமைக் கடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி மக்கள்  கலந்துகொண்டனர்.

மாசித் தெப்பத் திருவிழா பந்தக்கால்  நடும் நிகழ்ச்சி : ரெங்கநாதர் ஆலயத்தில் 11 நாட்கள் வைபவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், மாசித் தெப்பத் திருவிழாவுக்கான  பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா  11 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நிகழ்ச்சிகளுக்கான  பந்தக்கால் நடும் வைபவம்  மேலூர் சாலையில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுடன், மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.  

கோயில் திருவிழா - பக்தர்கள் நேர்த்தி கடன் 

சேலம் அரிசிபாளையத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி சுமந்து மேளதாளங்கள் முழங்க  கோயிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

500 கிலோ பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் 

புதுச்சேரியில் உள்ள  ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. 500 கிலோ எடை கொண்ட ரோஜா,தாமரை, சம்பங்கி,மரிக்கொழுந்து,சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்பாபிஷேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 



Next Story

மேலும் செய்திகள்