2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை பெறுவது ஏன்? - ஆசிரியர்கள் அதிர்ச்சி

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை தமிழக அரசு, கேட்டு பெற்றுள்ளதால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை பெறுவது ஏன்? - ஆசிரியர்கள் அதிர்ச்சி
x
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக 5 ஆயிரத்து 500 அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது இடம் மாறுதல், பணியிடை நீக்கம் என துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். இதையடுத்து, அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் முழு விபரங்களை பள்ளிக் கல்வி துறை இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வி துறை இயக்குனர் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, 2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்த ஆசிரியர்கள் மீது சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுவதால், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்