இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி : ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவு

சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது
x
கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை குருநானக் கல்லூரியில் தொடங்கிய இந்த கண்காட்சியில், வனப்பாதுகாப்பு, நாட்டுப்பற்று, சுற்றுச்சூழலை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், அந்தமான் சிறை, ஜாலியன்வாலாபாக் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகள் ஒலி,ஒளி காட்சிகளாக இடம் பெற்றன.

மேலும் பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 

நிறைவு நாளில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நிறைவு பெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்