ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் - மண்ணுக்குள் புதைத்து பாதுகாக்கும் வனத்துறை

அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து இனத்தைக் காக்க, கடலூர் மீனவர்கள் விடியவிடிய உழைத்து வருவது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
x
அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து இனத்தைக் காக்க, கடலூர் மீனவர்கள் விடியவிடிய உழைத்து வருவது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த கடல் ஆமை, வங்கக் கடலோரத்தை தேர்வு செய்கின்றன. கடலுக்குள் இருந்தவாறு முட்டையிட சாதகமான சூழல் உள்ள இடத்தை தேர்வு செய்வதில் ஆலிவ் ரிட்லியின் நுட்பம் அளப்பரியது. அதன் தேர்வில் தமிழகத்தின் கடலூர் கடற்கரை இடம் பிடித்திருப்பது அதிலும் சிறப்பு. நள்ளிரவு 12மணி முதல் 3மணி வரை கரைக்கு வரும் ஆமைகள், இரண்டடி ஆழத்துக்கு குழிதோண்டி, 150 முட்டைகள் வரை இடுகின்றன. ஆனால், முட்டைகளை கரையில் இருக்கும் நாய், நரி, காகம் போன்றவை தமக்கு இரையாக்கி விடுகின்றன. இவற்றில் இருந்து பாதுகாக்க, அரிய வகை முட்டைகளை சேகரித்து பொரிக்க வைக்க மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முட்டை பொரிக்கும் தடுப்புக்குள் அவை பாதுகாக்கப்பட்டு கடலுக்குள் விடப்படுகின்றன. இதுவரை 5 ஆண்டுகளில் 63 ஆயிரம் அதிகமான ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் இறக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், முட்டைகளை சேகரிப்பது சவாலானப் பணியாக உள்ளது. விடிய விடிய தேடும் மீனவர்களுக்கு ஆமைகளின் தடம் தெரிந்திருக்க வேண்டும். பிறகு மண்ணை நீக்கி முட்டைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செல்கையில் ஆமை முட்டையிடுவதை நேரடியாக பார்க்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கும். எப்போதும், டிசம்பரில் கரைக்கு வரும் ஆமைகள், கஜா புயல் தாக்கத்தால் தற்போது வருவது குறிப்பிடத்தக்கது.

முட்டைகளை திருடும் நபர்கள், பாலீத்தின் பொருட்களின் ஆக்கிரமிப்பு, கடல்நீரில் கலப்பது போன்றவையால் ஆலிவ் ரிட்லி அழிவதும் உண்மை


Next Story

மேலும் செய்திகள்