நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை - காமராஜ்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
x
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்த ஆண்டு 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்