ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை
x
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆற்றின் கரைகள் சேதமடைந்து அங்குள்ள மின்கோபுரங்கள் விழும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு, மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்