சென்னை : கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை
x
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பனையூர் நைனார்குப்பத்தைச் சேர்ந்த பாத்திமா தன்னுடைய காரை காவலாளி சின்னபையன் என்பவர் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார். கடந்த 27ம் தேதி போலீஸ் என கூறி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் சிரஞ்சீவி, வேலு, ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்