சின்னதம்பி யானையை விரட்டுவதில் சிக்கல் : வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் யானை

பொள்ளாச்சி அருகே மலைஅடிவார கிராமங்களில் வலம் வரும் சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
சின்னதம்பி யானையை விரட்டுவதில் சிக்கல் : வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் யானை
x
கோவையிலிருந்து டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு காடுகடத்தப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் களமிறங்கியுள்ளது. பொள்ளாச்சி மலை அடிவாரத்தையொட்டியுள்ள கிராமப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக யானை வலம் வருகிறது. 60க்கும் மேற்பட்ட வனகாவலர்கள் அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வனப்பகுதிக்குள் செல்ல பிடிவாதம் செய்யும் சின்னத்தம்பி யானை, மஞ்சநாயக்கனூர், தேவனூர்புதூர் வழியாக உடுமலை வனச்சரகம்பகுதியில் நடமாடி வருகிறது. இதனை தொடர்ந்து, மலை அடிவார கிராமமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்