"மார்ச் 1 முதல் தமிழகத்தில் அனுமதியின்றி விடுதிகள் இயங்க கூடாது" - உயர்நீதிமன்றம் அதிரடி

மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பெண்கள் குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 1 முதல் தமிழகத்தில் அனுமதியின்றி விடுதிகள் இயங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி
x
மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பெண்கள் குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள், பிப்ரவரி15 ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் விடுதிகளின் விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத்துறை தடையில்லா சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் அனைத்து ஆட்சியர்களும் தங்களுக்கு வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்