பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்

ஒன்பது நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்
x
ஒன்பது நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர். பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தை திரும்ப பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு நேற்று அறிவித்தது. இதனையடுத்து அனைவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு திரும்பினர். தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனையடுத்து அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படுகின்றன. ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டும் பயோமெட்ரிக் முறையில் ரேகையை பதிவிட்டும செல்கின்றனர். புதுகோட்டை மாவட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்ற 90 பேரை தவிர,  மற்ற அனைவரும் பணிக்கு திரும்பினர். இதேபோல் மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, உள்ளிட்ட  அனைத்து பகுதிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். 

Next Story

மேலும் செய்திகள்