இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு
x
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி கல்யாணசுந்தரம், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழு நடத்தி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜா 75 நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்களை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்