பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறைக் கைதிகளின் "ப்ரீடம் பஜார்"

சென்னை தீவுத்திடலில் களை கட்டியுள்ள, 45வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள 'ப்ரீடம் பஜார்' பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
x
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும், சுற்றுலா, தொழில் பொருட்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் தயாரான கைத்தறி, வேலூர் சிறையில் தயாரான காலணி உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 
கண்ணிமைக்கும் நொடிபொழுதில் செய்யும் குற்றத்தின் பின்விளைவுகளில் இருந்து மீளமுடியாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் கைதிகளின் மறுவாழ்விற்கு சிறிய நம்பிக்கை கீற்றாக இருக்கிறது, ஃபிரீடம் பஜார்

Next Story

மேலும் செய்திகள்