இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை

பணியில் சேராத ஆசிரியர்கள், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை
x
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.  இதனையடுத்து 80 விழுக்காடு ஆசிரியர்கள்  மாலை 7 மணிக்குள் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணியில் சேராத ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதுடன், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்