திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு சம்பவம்
வேலூர் அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். 38 வயதான இவருக்கு, தந்தை கணபதி மற்றும் சகோதரர் லிங்கேஷ் ஆகியோர் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சொத்தை பிரித்து தராமல் ஏமாற்றி வந்ததால் மனமுடைந்த ஜானகிராமன், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். பின்னர் அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story