காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்புங்கள் - ஆசிரியர்களுக்கு இறுதிக்கெடு விதித்தது அரசு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது.
காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்புங்கள் - ஆசிரியர்களுக்கு இறுதிக்கெடு விதித்தது அரசு
x
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இன்று காலை 9 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து விட்டு, உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியினை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்