ஆசிரியர்கள் பணிக்கு வராததால் குழந்தைகள் போராட்டம் : திருக்குறள் சொல்லி கொடுத்த போலீசார்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். வட்டாட்சியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பெற்றோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பூட்டுகள் உடைக்கப்பட்டு வகுப்பறைக்குள் குழந்தைகள் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காவல் ஆய்வாளர், திருக்குறள் சொல்லி கொடுத்ததால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story