திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி : இருமாநில போக்குவரத்து கடும் பாதிப்பு
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இருந்து கோவை நோக்கி வந்த அந்த லாரி 14ஆவது கொண்டை ஊசி வளையில் திரும்பும் போது இந்த விபத்து நேர்ந்தது. இதனால், தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிறிய ரக வாகனங்கள் மற்றும் பேருந்து மட்டும் செல்லும் நிலையில் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story

