தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை என பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.
x
அரசு, நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்காத வகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை அடிப்படையில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்தது. அவர்கள் அனைவரும் இன்று காலை 9 மணிக்கு பணியேற்க வருமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. போராட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று மாலை வரை காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்