பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் 5 லாக்கரை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
x
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று வங்கியை அதிகாரிகள் திறந்த போது, கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி சுவரை கேஸ் வெல்டிங் மிஷினை கொண்டு துளையிட்டு, 5 லாக்கரை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள், அந்த வங்கியின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் நகைகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்க, வங்கி முன் காத்திருக்கின்றனர். கேஸ் வெல்டிங் மிஷின், சுத்தியலை பறிமுதல் செய்த போலீசார், வங்கியில் உள்ள எச்சரிக்கை அலாரம் வேலை செய்யாதது ஏன்? கொள்ளையார்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் துணிகர கொள்ளை


வங்கியில் துணிகர கொள்ளை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்


Next Story

மேலும் செய்திகள்