பணிக்கு வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை அதிரடி

பணிக்கு வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை அதிரடி
பணிக்கு வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை அதிரடி
x
பணிக்கு வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என 
எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் சேரும் ஆசிரியர்களை
சங்கம் சார்ந்த நபர்கள் தடுக்க முயன்றால்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் 
தெரியபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய ஆசிரியர் பணி : இளம் பட்டதாரிகள் ஆர்வம் 

ஜாக்டோ ஜியோவின் வேலைநிறுத்த போராட்டத்தினால், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அரசுப்பள்ளிகளில் பெறப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விண்ணப்பம் பெறப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு பட்டதாரி  இளைஞர்கள் குவிந்தனர்.

தற்காலிக ஆசிரியராக பணிக்காக அலைமோதும் கூட்டம் : அச்சத்துடன் விண்ணப்பிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டார கல்வி மையத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக இதுவரை 700க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் ,  போராட்டம் முடிவுக்கு வந்த  பின்னர் அரசு தங்களை விலக்கி விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.அப்படி செய்யும் பட்சத்தில் தங்களின் பழைய வேலையும் பறிபோய்விடும் என்பதால் அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.   

நியமிக்கப்படும் ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிகமானவர்களே : நியமன ஆணையில் தகவல்

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதிலாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிகமானவர்கள்தான் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நியமனத்தின் அடிப்படையில் அரசின் வேலைவாய்ப்பிற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது என்று அவர்களுக்கான நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் போது உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசால் நிதி ஒதிக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்