தற்காலிக ஆசிரியர் - யாருக்கு முன்னுரிமை?

தற்காலிக ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்காலிக ஆசிரியர் - யாருக்கு முன்னுரிமை?
x
ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தமிழகத்தில் விறுவிறுப்படைந்துள்ளது.  பட்டப்படிப்பை முடித்தவர்கள் உள்பட அனைவரும் அதிக அளவில் இதற்கு விண்ணப்பித்து வருவதால் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே  முதலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்றும் அதேபோல், முதுகலை பட்டப்படிப்பிற்கு தகுதியானவர்களுடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணி நியமனம் செய்வது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்