மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன : 112 பேருக்கு பத்ம விருதுகள்
மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள 112 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேர்களுக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மோகன்லால், விஞ்ஞானி நம்பி நாராயணன், குல்தீப் நய்யாருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர் பிரபு தேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, கண்மருத்துவர் ரமணி, ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story