வீடு புகுந்து கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவனின் கள்ள உறவு காரணமா?

சென்னையில் வீடு புகுந்து கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு புகுந்து கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவனின் கள்ள உறவு காரணமா?
x
சென்னையில் வீடு புகுந்து கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சரவணன், விஜயா தம்பதியரின் வீட்டினுள் நுழைந்த 3 பேர், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் சரவணன் பலத்த காயங்களுடன் மயக்கமடைய, வெட்டு காயங்களுடன் அலறியபடி ஓடிவந்த விஜயாவை பார்த்த பொதுமக்கள் இருவரையும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ராஜா என்பவரது மனைவிக்கும், சரவணனுக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும், அதனால் ஆட்டோ ராஜா தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்