மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
x
நரசிம்ம சாமி கோவில் தெருவை சேர்ந்த பாபு, தேவி தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களாக, கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தை, கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், கத்தியை வீட்டின் பின்புறம் வீசி விட்டு காவல் நிலையத்தில் பாபு சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்