அரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
x
வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. 

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். வெளிபுறத்தில் சுகாதாரமின்றி காட்சி அளிக்கும் இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் கிழிந்த படுக்கைகள், நோயாளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது,  குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றுவது போன்றவைகளால் அரசு மருத்துவமனை அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய நடவடிக்கை எடுத்து, மருந்துகள் தடையின்றி கிடைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்