பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
x
* தமிழகத்தில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

* அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த விவரங்கள் முழுமையாக இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பாலில் கலப்படம் செய்வது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல் என்றும் அதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்

பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன,  அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை , அபராதம் வசூல் உள்ளிட்ட விவரங்களை  அறிக்கையாக, வரும் பிப்ரவரி 25 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். விவரங்களை வழங்க ஒத்துழைக்காத 
மாவட்ட வருவாய் அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்  நீதிபதிகள் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்