பொறியியல் நுழைவுத்தேர்வு: '25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்' - உச்சநீதிமன்றம்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பொறியியல் நுழைவுத்தேர்வு: 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் - உச்சநீதிமன்றம்
x
பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், 'நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "இந்த ஆண்டு, ஜே.இ.இ. மெயின் மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகளில், 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தீர்மானிக்கப்படும்'' என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்