"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்

"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்"
x
அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதல்கட்டமாக 50 பேர் நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அவர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அட்டவணை பிப்ரவரி 15ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று கூறினார். பள்ளி மாணவர்களை வெளிநாடு அழைத்து செல்லும் திட்டம் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்