சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு

சிட்னியை போல் மாறும் மதுரை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
x
மதுரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 344 கோடி ரூபாய் செலவிலான 9 திட்டங்களை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் துவங்கிவைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் வைகை ஆறு மேம்பாடு திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம், சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், அங்கன்வாடி மையங்கள், குன்னத்தூர் சத்திரத்தில் கடைகள் கட்டுதல், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் திட்டங்களை விளக்கியும், கோரிக்கை விடுத்தும் பேசினர்.

Next Story

மேலும் செய்திகள்