கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்

கோவை மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டை ​தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்
x
கடந்த 2 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டை அடுத்த அட்டமலா பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த நக்சல் இயக்கத்தினர் தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் எழுதிய நோட்டீஸ்களை அப்பகுதியில் ஒட்டி சென்றுள்ளனர். அதில் நாடுகாணி கொரில்லா படை ராணுவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கொரில்லா படை நக்சல்கள் கோவை மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என கேரள மாநில தண்டர் போல்ட் குழுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தலைமையில் கடந்த 2 நாட்களாக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 30 நக்சலைட்டுகளின் புகைப்படம் அடங்கிய நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கிராமங்களுக்கு வந்தாலும், வனத்தில் பதுங்கியிருந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வன கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்