கோவையில் களைகட்டிய பொங்கல் விழா - பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி

கோவையில், குதிரை வண்டி சவாரி, சண்டை சேவல், பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க நடனம் என பொங்கல் விழா களை கட்டியது
கோவையில் களைகட்டிய பொங்கல் விழா - பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி
x
கோவையில், குதிரை வண்டி சவாரி, சண்டை சேவல், பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க நடனம் என பொங்கல் விழா, களை கட்டியது. முழுக்க முழுக்க நகரத்தில் வாழும் மக்களுக்கு, கிராமத்து பண்பாடு  மற்றும் கலாச்சாரங்களை பதிவு செய்யும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து, அலசுகிறது இன்றைய சிறப்பு பார்வை

தை திருநாளை முன்னிட்டு அங்குள்ள கொடிசியா மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில், எக்காளம், கோணத்தாரை, துடும்பு, கொக்கரை, கோயில் தவண்டை, பிரம்மதாளம், நெடுந்தாரை, மந்தப்பறை உள்ளிட்ட அரிய வாத்தியங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பொதுமக்கள் இசைத்து மகிழ்ந்தனர். சண்டை சேவல், ஜல்லிக்கட்டு காளைகள், மாட்டு வண்டி ஆகியவை அழகு சேர்த்தன. அவற்றை குதிரை வண்டிகள் மூலம் பயணித்த நகர மக்கள், தங்களுக்கு இது புதிய அனுபவம் என மகிழ்ச்சி தெரிவித்தனர். 

வழுக்கு மரம் ஏறுதல், இளவட்ட கல் தூக்குதல் போன்ற போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க பார்வையாளர்களை அவை வெகுவாக ஈர்த்தன. கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கிராமிய இசை நிகழ்ச்சிகளுக்கு அங்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. முழுக்க முழுக்க நகரத்தில் வாழும் தங்களுக்கு, கிராமத்து பண்பாட்டு கலாச்சாரங்கள் வியப்பளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொன்றும் புதியதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாக குழந்தைகள், சிறுவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்