மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

நாமக்கல் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், கடந்த மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடப்படவில்லை. அதற்கு கிராமத்தினர் கூறும் காரணம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்
x
நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது சிங்கிலிப்பட்டி என்ற கிராமம்.  பொங்கல் பண்டிகையால் தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த கிராமம் மட்டும் எவ்வித ஆரவாரமும் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.  இங்கு 3 தலைமுறைகளாக யாரும் பொங்கல் கொண்டாடுவதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப்பட்ட  உணவை நாய் சாப்பிட்டதாகவும், அதனை அபசகுனமாக கருதி அந்த ஆண்டில் பொங்கல் கொண்டாடவில்லை என்று கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்ததாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் அதைத் தொடர்ந்து பொங்கல் கொண்டாடுவதையே தவிர்த்து விட்டதாகவும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்