தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்

சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை அவரது மகள் மற்றும் உறவினர்களே குண்டு கட்டாக தூக்கி தெருவில் வீசிய சம்பவம், ஒசூரில், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்
x
சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை அவரது மகள் மற்றும் உறவினர்களே குண்டு கட்டாக தூக்கி தெருவில் வீசிய சம்பவம், ஒசூரில், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒசூர் மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ். 80 வயதாகும், ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவருக்கு ராஜ்குமார், பாபு என்ற இரு மகன்களும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. தனராஜின் மனைவி இறந்துவிட, மகன்கள் மற்றும் மகள் தந்தைக்கு ஆதரவாக இருந்து வந்தனர். அவர் சேர்த்து வைத்திருந்த சொத்துகளால் அவரது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. மகள் தனலெட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர், சொத்தை பிரித்து தரக்கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகள் மற்றும் மருமகன் ஆகியோர்,  வீட்டிலிருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருவில் வீசியதுடன், தந்தை என்றும் பாராமல், 80 வயதான தனராஜையும், குண்டுக்கட்டாக தூக்கி தெருவில் வீசியுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அக்கம்பக்கத்தினர், மனைவி இருந்தவரை, குடும்பம் ஒற்றுமையாக இருந்ததாகவும், மனைவியின் மறைவுக்கு பிறகு தனராஜை பெற்ற மகளே மதிக்கவில்லை என்றும் கூறினர். தனராஜ் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால், இந்த சம்பவம்  குறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்