ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு
x
சென்னை அபிராமபுரம் ரேஷன் கடை ஊழியர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயிரத்து 455 ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அரசிடமிருந்து நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த  கடைகளிலும் 20 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், மீனவர் சங்கங்கள், நடமாடும் ரேஷன் கடைகள் என மொத்தம் 35 ஆயிரத்து 232 ரேஷன் கடைகளில்  கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என இது சம்பந்தமாக  அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 28 ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்