மாமல்லபுரம் கலாச்சார திருவிழா : மாணவிகள் அசத்தல் நடனம்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பள்ளி மாணவிகளின் தீச்சட்டி நடனத்தை பார்த்து சிலிர்த்துப்போன வெளிநாட்டினர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம் கலாச்சார திருவிழா : மாணவிகள் அசத்தல் நடனம்
x
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பள்ளி மாணவிகளின் தீச்சட்டி நடனத்தை பார்த்து சிலிர்த்துப்போன வெளிநாட்டினர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் ஒருமாதம் நடக்கும் கலாச்சார திருவிழா கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தனியார் நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மயிலாட்டம், தீச்சட்டி நடனம் என ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளையும் கட்டிப்போட்டன. திறந்தவெளி மேடையில் நடைபெற்ற நடனத்தில் சொக்கிப்போன இங்கிலாந்து நாட்டுப் பயணிகள் 400 பேரும், மாணவிகளை பாராட்டி, அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்