விழுப்புரம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாயை கைப்பற்றினர்.
விழுப்புரம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாயை கைப்பற்றினர். விழுப்புரம் கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக துரைசாமியும், கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குனராக முத்தழகுவும் பணியாற்றி வருகின்றனர். அங்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கம் சிக்கியது. 

Next Story

மேலும் செய்திகள்