சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் புது மலர்ச்சி ஏற்படுத்தியுள்ள பிளாஸ்டிக் தடை...

சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் புதுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிளாஸ்டிக் தடை. அதை பற்றி இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
x
குழந்தைகள் என்றாலே சிறப்பு தான் அதிலும் இந்த சிறப்பு குழந்தைகளின் உழைப்பு மிகச்சிறப்பு.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தொடர்ந்து துணிப்பைகள் கூடைப்பைகள் மற்றும் மண்பாணட பொருட்களுக்கான மவுசு அதிகரித்துகொண்டு இருக்கிறது. இந்த வரிசையில் கையில் நெசவு செய்த போர்வைகள், துண்டுகள்,புடவைகள் மற்றும் தையல் கடையில் மீதமாகும் துணியிலிருந்து செய்யப்படும் மிதியடி போன்ற படைப்பாற்றல் மிகுந்த பொருட்கள் காண்போரை கவருகிறது. இருபது வருடங்களாக இந்த சிறப்பு குழந்தைகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வரும் மோகனகிருஷ்ணன் இந்த குழந்தைகளிடம் கற்கும் ஆற்றல் அதீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். சிறப்பு குழந்தைகள் தயாரிக்கும் பொருட்களை சமூக வலைதளங்கள் மூலம் சந்தைப்படுத்தும் பணியில் தன்னலமின்றி தன்னை ஈடுபடுத்து வருகிறார் அனுஷியா.பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க வேண்டும் என்ற ஆசையில் சிறு முயற்சியாகவே இதை செய்து வருவதாக கூறுகிறார் அனுஷியா.

Next Story

மேலும் செய்திகள்