"ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்குமா ? "
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ஒரு கோடியே 90லட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ஒரு கோடியே 90லட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இவர்களுக்கு வருகிற 14 ம் தேதிக்குள் விநியோகிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத, அடையாளத்திற்கு மட்டுமே ரேஷன் கார்டு வாங்கியிருப்பவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க உத்தரவிடுமாறு, அதிமுக வழக்கறிஞர் பால சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் முறையிட்டார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தினர். இதனிடையே, அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்கும் வகையில், தமிழக அரசு, சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
Next Story