பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாகுமா ஈத்தல் கூடைகள்...?

பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ள நிலையில், பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாக ஈத்தல் கூடைகள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
x
ஈத்தல் கூடைகளுக்கு  மக்களிடையே  வரவேற்பு இல்லை என்பதால்,  இந்த தொழிலில் போதிய வருமானமில்லை என்றும், இதனால் பலர் வேறு வேலைகளைத் தேடிச் சென்றுவிட்டதாகவும்  இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கூறியுள்ளனர். தற்போது பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளதால்,  அதற்கு மாற்றாக ஈத்தல்  பொருட்களை ஊக்குவித்தால்  மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தொழிலுக்கு தேவையான ஈத்தலை வனப்பகுதிகள் இருந்து சேகரிப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பதால், வனத்துறை உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.  சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியதுடன், இதை சேகரிக்க அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கம் அமைத்து,  கொள்முதல் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்