மாற்று பொருள் உற்பத்திக்கு அதிக கடன் உதவி வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நபார்ட் வங்கியின் 2019-2020 நிதியாண்டின்  கடனுதவி மதிப்பீடு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், பயிர்காப்பிட்டு திட்டத்தில் இந்த ஆண்டில் 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் நலன்களை காக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவத்த அவர், சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டு பணை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும்கூறினார்.  பழம் மற்றும் காய்கறிகளின் தன்மை மாறாமல் இருக்க  495 சேகரிப்பு  மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிளாஸ்டிக் மாற்று பொருள் தயாரிப்புக்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்