பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
x
* மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த 50 பிளாஸ்டிக் வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர்.

* சோதனை நடத்தும் அதிகாரிகள் அரசாணையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும்  பறிமுதல் செய்து வருவதாக மனுவில் கூறியுள்ளனர் . இந்த வழக்கு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

* அரசாணை பற்றி தெளிவான புரிதல் இல்லாமல், அதிகாரிகள் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதாக  மனுதாரர்  தரப்பில் வாதிடப்பட்டது. 

* இதையடுத்து, தடை செய்யப்பட்ட 14 ப்ளாஸ்டிக் தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும்,  வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்த கூடாது எனவும் தெளிவுபடுத்தி, வழக்கு விசாரணையை  வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்