சிறுமிகளுக்கு கொடுமை : தண்டனை விவரம் குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் 7 மற்றும் 8ஆம் படித்து வந்த 2 மாணவிகளை சீரழித்து பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 8 ஆண்டுகள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
x
* கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் 7 மற்றும் 8ஆம் படித்து வந்த 2 மாணவிகளை சீரழித்து பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 8 ஆண்டுகள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி லிங்கேஸ்வரன் இன்று அறிவித்தார்.  

* குற்றவாளிகளில் ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, அவர்களுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்தார். மற்ற 8 குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகளும் குறைந்த பட்சமாக 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்த நீதிபதி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

* பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கு அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் வழங்க ஏற்கனவே உத்தரவிட்ட நீதிமன்றம் அபராத தொகையிலிருந்து தலா5 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது. 

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் : தண்டனை விவரங்களை அறிவித்தது நீதிமன்றம்


பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு : குற்றவாளிகளுக்கு இரட்டை மற்றும் 4 ஆயுள் தண்டனை



Next Story

மேலும் செய்திகள்