தாயை பராமரிக்காததால் தந்தையை கொலை செய்த மகன்...
பதிவு : ஜனவரி 07, 2019, 02:07 PM
காட்பாடியில் உடல்நலம் குன்றிய தாயை காப்பாற்றவில்லை எனக்கூறி, தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள வஞ்சூரை சேர்ந்தவர் பிரபு, அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். பிரபுவின் தந்தை கண்ணன், அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். கண்ணனுக்கு, அப்பகுதியில் உள்ள வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபுவின் தாய் நிர்மலா, கடந்த 13-ஆம் தேதியன்று உயிரிழந்தார். இந்தநிலையில், தனது தந்தை கண்ணனுடன், பிரபு கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நீங்கள் தகாத உறவு கொண்டிருந்ததால் தான், எனது தாயை கவனித்துக் கொள்ளவில்லை" என கண்ணனிடம் சொல்லி ஆத்திரமடைந்த பிரபு, அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், கண்ணன் உயிரிழந்ததை தொடர்ந்து, காட்பாடி காவல் நிலையத்தில் பிரபு சரணடைந்தார். தாயை கவனிக்காததால், மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

679 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4725 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6099 views

பிற செய்திகள்

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

37 views

ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

12 views

மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

15 views

சென்னையில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது.

6 views

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

129 views

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.