146 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிவலிங்கம்...

புதுக்கோட்டை அருகே சுனையில் மூழ்கியிருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் 146 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என பல மலைகள் உள்ளன. இந்த மலைகளில்,  பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் இந்த பகுதியில் இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி 7 - ம் நூற்றாண்டிலிருந்து 9 -ம் நூற்றாண்டுடைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. அப்படி, மேலமலை விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் உள்ள சுனையில்  உள்ள குகை கோயிலில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தொல்லியல் துறையினரின்அனுமதியோடு தன்னார்வ அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் , அக்கிராமத்தை சேர்ந்த மக்களும் சுனையினுள் மூழ்கியிருந்த சிவலிங்கத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்படி சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் உள்ள அந்தச் சுனையில் உள்ள நீரை மோட்டார்களை கொண்டு வெளியேற்றும் பணி  5 நாட்களாக நடைபெற்றது. சுனையில் இருந்த நீரை முழுமையாக அப்புறபடுத்திய போது குகைக் கோயிலினுள் சிவலிங்கம் காட்சியளித்தது. இதனையடுத்து சிவலிங்கத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்