"கல்வி உரிமைச் சட்டத்தினால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" - அன்புமணி ராமதாஸ்

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தினால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது -  அன்புமணி ராமதாஸ்
x
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  23.08.2010 முதல் 23.08.2012 வரை ஆசிரியர்களாக சேர்ந்தவர்கள் 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது, ஆனால்  தகுதித் தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தவில்லை என்பதால் காலக்கெடுவை 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்தது. அதன் பிறகும் குறிப்பிட்ட அளவில் தேர்வுகள் நடக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதனால் தகுதி பெறாத ஆசிரியர்கள் வரும் மார்ச் மாதத்துக்கு பின்னர் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அரசு உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்  என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்