குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 2.15 லட்சம் வழக்குகள் அதிரடியாக முடித்து வைப்பு....

குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல்.
x
2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாததால்,  2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதிகப்பட்சமாக காஞ்சிபுரத்தில் மட்டும் 28 ஆயிரத்து 573 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி முரளிதரன் , காவல்துறையும், குற்றவாளிகளும் கூட்டு சேர்ந்து இவ்வளவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக சந்தேகம் எழுப்பினார். இந்த வழக்குகளை விசாரித்த மாஜிஸ்திரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்பட்டு வழக்குகளை முடித்து வைத்துள்ளதாகவும், நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து, வரும் 25-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்