வடபழனி கட்டட விபத்து வழக்கு : "விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை" - உயர்நீதிமன்றம்

சென்னை வடபழனியில், கட்டடம் எரிந்து 4 பேர் பலியான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடபழனி கட்டட விபத்து வழக்கு : விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை - உயர்நீதிமன்றம்
x
சென்னை வடபழனியில், கட்டடம் எரிந்து 4 பேர் பலியான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அதிகாரி யார் என்றே தெரியாமல் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். சட்டவிரோத கட்டடடம் என தெரிந்தும் 20 ஆண்டுகளாக ஏன் வரிவசூல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரியாக வசூலிக்கப்பட்ட தொகையை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏன் வழங்க கூடாது என்றும் யோசனை தெரிவித்தனர். விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்